திருவொற்றியூர்
திருவொற்றியூர் அரசு கலைக்கல்லூரி விளையாட்டு திடலில் நடைபெற்ற போட்டியினை பூப்பந்தாட்ட கழகம் சார்பில் மூன்றாம் ஆண்டு ஆலிஸ் வேதமாணிக்கம் நினைவு கோப்பை நடைபெற்றது இதில் காஞ்சிபுரம் சென்னை கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றனர்
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த பூப்பந்தாட்ட விளையாட்டு போட்டியில் இறுதி ஆட்டத்தில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணியிடன் மோதிய ஈரோடு எஸ் பி பி சி சவக்காட்டு பாளையம் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது.
இரண்டாம் பரிசு சென்னை ஸ்பார்டன்ஸ் அணியிடன் மூன்றாவது இடத்தை திண்டுக்கல் ஏ ஆர் மருத்துவமனை தாடிக்கொம்பு அணி நான்காவது இடத்தை ஜோலார்பேட்டை ஜே பி பி சி அணியும் ஐந்தாவது இடத்தை டி பி பி சி திருவொற்றியூர் அணியும் வெற்றி பெற்றது.
இந்த இரண்டு நாள் நடைபெற்ற பூப்பந்தாட்ட விளையாட்டு போட்டியில் முதல் இடம் பிடித்த ஈரோடு அணி வீரர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மற்றும் சுழல் கோப்பை வழங்கப்பட்டது.
இப் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ஈரோடு அணியின் கதிரேசன் சென்னை ஸ்பாட்ன்ஸ் அணியின் கோகுல் கிருஷ்ணா திருவொற்றியூர் அணியின் கபிலன் ஆகியோருக்கு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் திருவள்ளுவர் பூப்பந்தாட்ட கழகத் தலைவர் மதியழகன் செயலாளர் எழிலரசன் மற்றும் கோடீஸ்வரன் ஆசைத்தம்பி உள்ளிட்டோர் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கி பாராட்டினர்.