துறையூர்
திருச்சி மாவட்டம், துறையூரில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு 25. 06. 2025 அன்று கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.11.25 கோடி மதிப்பீட்டில் துறையூர் பேருந்து நிலையத்தை புனரமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பாலக்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் அம்ரித் 2.0 திட்டத்தின்கீழ், ரூ.108.90 கோடி மதிப்பீட்டில் துறையூர் நகராட்சிக்கான குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் இ.ஆ.ப., பேரூராட்சிகளின் இயக்குநர் மா.பிரதீப் குமார் இ.ஆ.ப., தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் கிரண் குராலா இ.ஆ.ப.,சட்டமன்ற உறுப்பினர்கள் ந.தியாகராஜன், செ.ஸ்டாலின்குமார், சீ.கதிரவன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் எஸ்.எழிலரசன், நிர்வாகப் பொறியாளர்கள் ராஜகோபால், பன்னீர்செல்வம், நகரமன்றத் தலைவி இ.செல்வராணி, நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் தாணுமூர்த்தி, வட்டாட்சியர் மோகன்,முன்னாள் மாவட்ட சேர்மன் த.ராஜேந்திரன், துணை நகரமன்றத்தலைவர் ந.முரளி, நகர்மன்ற உறுப்பினர்கள் வீர மணிகண்டன், அம்மன் பாபு, நித்தியா கிருஷ்ணமூர்த்தி, இளையராஜா,சுமதி மதியழகன்,ஜானகிராமன் மற்றும் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, வீரபத்திரன்,சிவசரவணன், முத்துச்செல்வன்,ந.அசோகன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ், இலக்கிய பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், பொது குழு கிட்டப்பா, விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் நரேஷ்குமார்,வர்த்தக அணி தர்ஷினி திருமூர்த்தி,நகர துணை செயலாளர்கள் இளங்கோவன்,பிரபு மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்