தெற்காசிய தேசிய யூத் கூடைப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற விளையாட்டு பயிற்சி மாணவருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாலத்தீவில் நடைபெற்ற தெற்காசிய தேசிய யூத் கூடைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் என்ற விளையாட்டு விடுதி மாணவர் சுஜீத் என்பவரை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்
தெற்காசிய தேசிய யூத் கோடை பந்து போட்டி மாலத்தீவில் நடைபெற்றது இந்த போட்டியில் இந்தியா இலங்கை மாலத்தீவு மற்றும் வங்காளதேசம் போன்ற நாடுகளில் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர் இதில் இந்திய கூடைப்பந்து அணிக்கு தேனி மாவட்ட விளையாட்டு விடுதி மாணவர் சுஜீத் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வென்றுள்ளார்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக விளையாட்டு பயிற்சி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன
அந்த வகையில் விளையாட்டு மாணவர் தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளதை முன்னிட்டு வெற்றி பெற்ற மாணவருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார் இந்த நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் மற்றும் கூடைப்பந்து பயிற்றுநர் ரமேஷ் ராயர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்