எஸ் செல்வக்குமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே வானகிரி மீனவர் கிராமத்தில் விஜய் பிறந்தநாளை வாரம் முழுவதும் பல்வேறு நலதிட்டபணிகளை செய்து கொண்டாடிய தமிழக வெற்றிக்கழகத்தினர். அரசு பள்ளியில் உழவாரப்பணி,குடிநீர் அமைப்பு ஏற்படுத்துதல், பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கேடயம், 600 மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி என உற்சாக கொண்டாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் அடுத்த வானகிரி மீனவர் கிராமத்தில் தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜயின் பிறந்த நாளை வாரம் முழுவதும் கொண்டாடும் விதமாக வானகிரியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் உழவாரப் பணிகளில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகத்தினர் பள்ளி மாணவர்களின் குடிநீர் வசதிக்காக புதிய கைபம்பு அமைத்துக் கொடுத்தனர்.
அதனை தொடர்ந்து தங்கள் கிராமத்தில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் 600 பேருக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கேடயம் வழங்கி அவர்களது பெற்றோர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.
அதனை தொடர்ந்து வானகிரி கிராமத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செய்து புத்தாடைகள் இனிப்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
இந்நிகழ்வில் வானகிரி மீனவ பஞ்சாயத்தார்கள் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.