கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டிஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா உலக போதை பொருள் எதிர்ப்பு தினம் குறித்து பேசும்பொழுது மனித சமூகத்தைச் சீர்கெடுப்பதில் போதைப்பொருள் உபயோகம் முதலிடம் வகிக்கிறது.
போதைப்பொருள் பயன்பாடு மனித அறிவை மழுங்கச் செய்து சிந்திக்கும் திறனை அழித்து குடும்பம், சமூகத்தை தவறான பாதையில் இழுத்துச் சென்று விடும்.போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு உலக நாடுகள் நடவடிக்கை எடுப்பது மற்றும் போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவது என்ற நோக்கத்துடன் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 26ஆம் தேதி ‘பன்னாட்டு போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலை தடுக்கும் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.
இந்நாளில் ஒவ்வொருவரும் போதைப்பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார். மாணவர்கள் அனைவரும் போதைப்பொருள் எதிர்ப்பு தினம் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிறைவாக ஆங்கில ஆசிரியர் சிந்தியா நன்றி கூறினார்.