நாமக்கல் மாவட்டத்தின் 17-வது ஆட்சித் தலைவராகதுர்கா மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், (27.06.2025) பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்ட மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவேன் என பேட்டி

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த திருமதி. மருத்துவர். ச. உமா பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, இம்மாவட்டத்திற்கு புதிய ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட திருமதி. துர்கா மூர்த்தி, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17-வது புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக, அவருக்கு அரசின் அனைத்து துறை அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர் இதனை அடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. துர்கா மூர்த்தி, அரசு கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்கா மூர்த்தி,தமிழகத்தின் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து திட்டங்களையும் பொதுமக்களுக்காக கொண்டு செல்ல பாடுப்படுவேன்,
அனைத்து அரசு அலுவலர்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இந்த மாவட்ட மக்கள் கடின உழைப்பாளிகள், உழைப்பால் உயர்ந்தவர்கள்.

இந்த மாவட்டத்தில், ஏற்கனவே மாவட்ட வருவாய் அலுவலராக இருந்தபோது மாவட்ட நிலவரம் குறித்து நன்கு அறிந்துள்ளேன் தற்போது, மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளதால் மாவட்ட மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயலாற்ற முடியும். குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுவேன்.

மக்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். நிச்சமாக அனைத்து திட்டங்களை நிறைவேற்றுவேன். இவ்வாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *