திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், திருவாரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல துணை இயக்குநர் ஆலோசனைப் படி, சந்திரசேகரபுரம் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட 44. ரகுநாதபுரம் ஊராட்சி அணியமங்கலம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்ட சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
வலங்கைமான் கால்நடை மருத்துவர் மரு.சேனாதிராஜா பரிசுகளை வழங்கினார். மருத்துவர் சக்திவேல், சங்கவி, சிவ.செளர்ந்தர்யா, கலையரசி உள்ளிட்ட கால்நடை உதவி மருத்துவர்கள் குழு, கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, சினை ஊசி, சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை மற்றும் நோய் சிகிச்சை அளித்தனர். கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் செந்தில், மாரியப்பன், இந்திரா ஆகியோர் சிகிச்சை அளித்தனர். 250 க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.