போலி போலீஸ் அடையாள அட்டை வைத்து மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
எண்ணூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு சுனாமி குடியிருப்பு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது காரில் அமர்ந்து மதுபானம் அருந்தி கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்
அதில் ஒருவர் தனது தம்பி மணலி போக்குவரத்து காவல் துறையில் காவலராக பணியாற்றுவதாக கூறினார். பின் காரை சோதனையிட்டபோது 3 போலி போலீஸ் அடையாள அட்டை இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக நேதாஜி நகரை சேர்ந்த ரவிக்குமார் 28 என்பவரை பிடித்து விசாரித்தனர் அவர் இன்ஸ்டாகிராம் மூலமாக போலீஸ்காரர் ஒருவரின் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து அதில் சில திருத்தங்கள் செய்து புகைப்படம் மாற்றி போலி போலீஸ் அடையாள அட்டை வைத்து பயன்படுத்தியது தெரியவந்தது.
மேலும் இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி சுங்கச்சாவடிகளில் கட்டணமின்றி பயணித்து வந்ததும் தெரிய வந்துள்ளது .அவரை கைது செய்த போலீசார்
அவரிடம் இருந்து மூன்று போலி போலீஸ் அடையாள அட்டைகள் மற்றும் கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர் விசாரணைக்கு பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்