ஓரணியில் தமிழ்நாடு குறித்து தென்காசியில் வருவாய்துறை அமைச்சர் பேட்டி.

தென்காசி, ஜூலை:- 03

தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் அறிவித்துள்ள ஓரணியில் தமிழ்நாடு திட்டம் குறித்து தமிழ்நாடுபேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

இதுகுறித்து அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ஆர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

தமிழக மக்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் நோக்கத்திலும் தமிழ் மொழியையும் அழிக்கும் நோக்கத்தில் செயல்படும் மத்தியில் ஆளுகிற பாசிச பாரதிய ஜனதா கட்சியின் முயற்சியை முறியடிக்கும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்கிற கருத்துக்களை மக்களிடம் எடுத்துக் கூறி, தமிழ் மொழியையும் தமிழில் மானத்தையும் காப்பதற்கு நாம் அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும் மேலும் தமிழக அரசுக்கு மத்திய அரசிடம் இருந்து கிடைக்கின்ற நிதி மற்றும் திட்டங்களை பெறுவதற்கும், மத்திய அரசின் ஓரவஞ்சனையை தடுத்து நிறுத்தி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட தமிழக முதல்வர் தமிழக முழுவதும் பெரும் முயற்சி எடுத்து வருகிறார்.

தமிழகத்தில் 6800 பூத் -கள் உள்ளது.தென்காசியில் 1564 பூத் -கள் அமைந்துள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ள மக்களை பூத் டிஜிட்டல் ஏஜென்சி யை சேர்ந்த நிர்வாகிகள் சந்திக்கின்ற பணிகள் வருகிற மூன்றாம் தேதி தொடங்க இருக்கிறோம். 45 நாட்கள் நடைபெறும் இந்த பணியின் போது கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து வீட்டிற்கும் சென்று முதல்வர் ஸ்டாலினின் சாதனைகளை எடுத்து கூறும் பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.

இப்போது தமிழக அரசின் மூலம் மக்களுக்கு கிடைக்கப்பட்டுள்ள சலுகைகளையும் வருகிற காலத்தில் மக்களுக்கு தேவையான திட்டங்கள் என்னென்ன என்பதையும் அறிந்து அதனுடைய அறிக்கையை தலைமைச் செயலகத்திற்கு அனுப்ப உள்ளோம். மகளிர் திட்டங்கள்,
முதியோர் உரிமை தொகை மற்றும் கிராமப்புற மக்களுக்கு என்னென்ன தேவைகள் என்பதை அறிந்து அதனை உடனடியாக நிறைவேற்றும் பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.

கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்காக மட்டும் இந்த பணிகள் இல்லை திமுகவிற்கு வாக்களிக்கும் மக்களையும் திமுகவிற்கு வாக்கு அளிக்காத மக்களையும் திமுகவிற்கு வாக்கு செலுத்தும் மக்களையும் மூன்று விதமான கருத்துக்களை கொண்டுள்ள அனைவரும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வாக்கு செலுத்தும் வகையில் எங்களுடைய செயல்பாடு இருக்கும். 45 நாட்கள் நடைபெறும் இப்பணியில், சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் என அனைத்து நிர்வாகிளையும் இப்பணியில் ஈடுபட முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் தென்காசி மாவட்ட ஆட்சியர் மூலம் மாவட்டத்திற்கு தேவையான திட்டங்கள் என்னென்ன என்பதை அறிக்கையாக எடுத்து வைத்துள்ளோம். இதனை உடனடியாக முதல்வரிடம் கொண்டு செல்ல உள்ளோம். தென்காசி நகருக்கு முதல்வர் வரும்பொழுது என்னென்ன திட்டங்கள் மக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது என்பதை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் போது
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே. ஜெயபாலன், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா, தென்காசி நகர மன்ற தலைவர் ஆர்.சாதிர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *