ஆண்டிபட்டி அருகே கோவில் பராமரிப்பு பணிக்கு நீதி உதவி வழங்கிய எம்பி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள திருக்கோவிலுக்கு தனது சொந்த பணத்தில் கோவில் கட்டுமான பராமரிப்பு பணிக்காக நிதி உதவியை தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி வழங்கினார்
ஆண்டிபட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர் கிராம மக்கள் அனைவரும் கொண்டாடும் பொது கோவில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது இந்த நிலையில் ஆண்டிப்பட்டி அருகே ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற தேனி எம்பி அவர்கள் கட்டுமான பணி நடைபெறும் கோவிலில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து அந்தக் கோயில் நிர்வாகிகளிடம் தனது பங்களிப்பாக கோவில் கட்டுமான பணிக்கு நிதி உதவியை வழங்கினார்
மேலும் விரைவில் கட்டுமான பணிகள் முடிந்து ஊர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தினார். உடன் கோவில் நிர்வாகிகள் கிராம கமிட்டி உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்