இராமநாதபுரம் மாவட்டம் கமுதி நகர் அரிமா சங்கத்தின் 2025- 26 ஆம் ஆண்டுக்கான கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
ஆசிரியர் ஆர்.சிவலிங்கம் அனைவரையும் வரவேற்று பேசினார் அரிமா சங்கத்தின் புதிய தலைவராக அரிமா எஸ். பார்த்திபன், செயலாளராக அரிமா கே. எஸ்.எம். முருகன், பொருளாளராக அரிமா பி.கே.கே. இராமமூர்த்தி ஆகியோரைகொண்ட புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முன்னாள் ஆளுநர் உலகின் நம்பர் ஒன் கவர்னர் அரிமா ஜே. கே. ஆர். முருகன் அனைவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மண்டல தலைவர் அரிமா பி.கே.சுப்பையா, வட்டாரத் தலைவர் அரிமா அழகர்சாமி, மாவட்ட தலைவர் அரிமா ரஞ்சித், மாவட்ட இணை செயலாளர் அரிமா ஜி சண்முகராஜபாண்டியன்,ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
25 ஏழை, எளியோர்களுக்கு அரிசி பை வழங்கப்பட்டது. மேலும் 12ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கல்வி உதவித்தொகை 5000 ரூபாய் வழங்கப்பட்டது,2024- 25 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு 11ஆம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர்,
அரிமா சங்கத்தின் நிர்வாகிகள் வி.பி.பொன்ஜி, கணபதி, உறுப்பினர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
தேசிய கீதம் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.