தாராபுரம் அருகே தனியார் இரும்பு ஆலை எதிர்ப்பு ஐந்து பஞ்சாயத்து மக்கள் காத்திருப்பு போராட்டம்.

தாராபுரம் அருகே இரும்பு ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்து பஞ்சாயத்து கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்டிஓ பேச்சுவார்த்தை தொடர்ந்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

தாராபுரம் அடுத்துள்ள இச்சிப்பட்டியில் தனியார் இரும்பு ஆலய அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த இந்த நிலையில் பஞ்சாயத்து சார்பில் ஏற்கனவே வழங்கிய கட்டிட பணிகளுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது அண்மையில் கலெக்டர் தனியார் இரும்பு ஆலை கட்டுமான பணிகளுக்கு அனுமதி அளித்த தொடர்ந்து தனியார் இரும்பு ஆலை நிர்வாகம் சார்பில் கட்டுமான பணி நேற்று நடைபெற்றது.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சூரியநல்லூர் கண்ணன் கோவில் சங்கரன்டாபாளையம் சிறுகிணறு கொழுங்மம்குழி ஐந்து பஞ்சாயத்து சேர்ந்த பொதுமக்கள் இச்சிப்பட்டி மாரியம்மன் கோவில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஈசன் தலைமையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர் சங்கரன்டா பாளையம் பட்டக்காரர் பாலசுப்பிரமணி வேன்உடையார் குண்டடம் மேற்கு ஒன்றியம் அதிமுக செயலாளர் கள்ளிப்பாளையம் சோமு போராட்ட குழு நிர்வாகி வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவசாய விவசாய நிலத்தை பரிசாக மாற்றாமல் இரும்பாலை அமைக்க கூடாது இரும்பு ஆலை அமைத்தால் காற்று மாசுபடும் ஏற்படும் விவசாயிகள் கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று கோரிக்கை வலியுறுத்தி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதற்குப் பல்வேறு சமூக அரசியல் கட்சி நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.

இதனைத் தொடர்ந்து தாராபுரம் ஆர்டிஓ பெலிக்ஸ் ராஜா காங்கேயம் டிஎஸ்பி மாயவன் மற்றும் அதிகாரிகள் குழு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆளை கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்தக் கூறி இருப்பதாகவும் இது குறித்து தற்போது கலெக்டரிடம் மனு மனு சீராய்வு மனு அளித்து நடவடிக்கை எடுக்கலாம் என ஆர் டி ஓ உறுதி அளித்தனர்.

இதை எடுத்துப் போராட்டத்தை ஒத்தி வைப்பதாகவும் மீண்டும் இரும்பு ஆலை நிர்வாகம் கட்டுமான பணிகளை துவங்கினால் ஆலயமுற்று இடுவோம் சாலை மறியல் போன்ற போராட்டங்களை ஈடுபடுவோம் என முடிவு செய்யப்பட்டது.

போராட்டத்தில் ஐந்து பஞ்சாயத்து சேர்ந்த 2000திற்கு மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு காலை 10 மணி முதல் மதியம் மூன்று மணி வரை தனியார் இரும்பு ஆலை எதிராக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பு ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *