திண்டுக்கல்லில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரூ.12 லட்சம் மதிப்பிலான உலர் பழங்கள் மற்றும் விதைகளால் செய்ய பட்ட மாலைகள் திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா எதிர்வரும் 7-ம் தேதி அன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில் கும்பாபிஷேக விழாவிற்காக பக்தர் ஒருவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த பூ வியாபாரி ஆறுமுகம் என்பவரிடம் உலர் பழங்களால் ஆன மாலை செய்ய ஆர்டர் கொடுத்தார் இதனைத் தொடர்ந்து பூ வியாபாரி ஆறுமுகம் கடந்த 10 நாட்களாக சுமார் 150 பேரை வைத்து ரூ.12 லட்சம் மதிப்பிலான 200 டிரை ப்ரூட் மாலைகளை தயார் செய்துள்ளனர்.
சுமார் 4 அடி முதல் 12 அடி உயரம் கொண்ட மாலைகளில் பிஸ்தா, முந்திரி, பாதாம், செர்ரி, கருப்பு திராட்சை போன்ற சத்துமிக்க உலர் பழங்களை கொண்டு சீராக வடிவமைத்து பயபக்தியுடன் தயார் செய்துள்ளனர்.