கோவை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், தமிழக முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க, இளைஞரணி செயலாளர் மற்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மேற்கு மண்டலப் பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் மாண்புமிகு வி. செந்தில்பாலாஜி அவர்களின் வழிகாட்டுதலிலும்,மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் (முன்னாள் எம்.எல்.ஏ) அவர்களின் உத்தரவின்படியும்,கோவை மாநகர் மாவட்டம் பெரிய கடை வீதி 80வது வார்டு, நாடார் வீதி, கெம்பட்டி காலனி குடியிருப்பு பகுதியில்,முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்த நாள் விழா மற்றும் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 80வது வட்டக் கழகச் செயலாளர் நா. தங்கவேலன்,பெரியகடை வீதி பொறுப்பாளர் என்.ஜே. முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பெ.மாரிசெல்வன் கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர், மாநகர் மாவட்ட திமுக வர்த்தகர் அணி அமைப்பாளர் பொள்ளாச்சி மா. உமாபதி
(தலைமைக் கழகப் பேச்சாளர்) சி. தருன்குமார் (தலைமை கழகப் பேச்சாளர்) ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சி தலைமை:பகுதி அமைப்பாளர் அமீன் –
பெரியகடை வீதி பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள்: சக்திவேல், சரத்குமார், மங்கை ஆனந்த், லேனா தன்சில், சூரிய , கு.சுமேஷ், அரவிந்தன் சிவா,
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்:இரா. தனபால் – மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்
துணை அமைப்பாளர்கள்:கே.பி. திருமலைராஜா, க. மணிகண்டன், லாரா பிரேம் தேவ், கோவை அருண், சி.எம்.எஸ். மசூது, துரை பிரவீன் குமார்
தெரு முனை பிரச்சாரத்தில் பங்கேற்றோர்: மாவட்ட சார்பு அணி துணை அமைப்பாளர்கள் வானவன் மணிகண்டன், கராத்தே ராஜேஷ், சந்துரு, மற்றும் புயல் சரவணன், வை.இளங்கோ, எம்.பி.பாண்டியன், ரவி,பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், சார்பு அணிகள்,BLA-2 பாகமுகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் திரளான கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.