திருப்பெரும்புதூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் எஸ் டி கருணாநிதி தலைமையில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருபெரும்புதூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மதுரமங்கலம், காந்தூர், சோகண்டி ஊராட்சிகளில், சிவபாதம், பொடவூர் ரவி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பி எல் எ 2 வாக்குச்சாவடி நிலை முகவர்கள், ,திருப்பெரும்புதூர் தொகுதி பொறுப்பாளர் மீஞ்சூர் பாஸ்கர் சுந்தரம் ,ஒன்றிய குழு தலைவர் எஸ் டி கருணாநிதி, ஆகியோர் பங்கேற்று 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
இதில் மாவட்ட கவுன்சிலர் சோகண்டி பால்ராஜ் , சந்தவேலூர் சத்யா, மதுரமங்கலம் சுருளி, திருமங்கலம் நரேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்