வாகன சோதனையில் 457கிலோ போதை பொருட்கள் பறிமுதல்-துறையூர் போலீசார் அதிரடி
துறையூர் ஜீலை-06
திருச்சி மாவட்டம் துறையூரில் போலி பதிவு எண் கொண்ட காரில் போதை பொருட்கள் கடத்தி வந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். (05/07/2025) அதிகாலை 4 மணி அளவில் பெரம்பலூர் பைபாஸ் சாலையில் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் உதவி காவல் ஆய்வாளர்கள் தினேஷ், வடிவேலு,தமிழ்ச்செல்வன், சஞ்சீவி மற்றும் துரை, செல்வமணி உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியின் போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அதி வேகமாக வந்த குஜராத் பதிவு எண் கொண்ட வெள்ளை நிற காரை போலீசார் நிறுத்தி உள்ளனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது.இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த காரை துரத்தி சென்றனர். அதற்குள் காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.குஜராத் பதிவு எண் கொண்ட காரின் பதிவு எண் போலியானது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் அந்தக் காரை சோதனை செய்து பார்த்ததில் காருக்குள் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.இதில் கூலிப் 28 கிகி,விமல் பாக்கு 84 கிகி, ஹான்ஸ் 345 கிகி மொத்தம் 57 மூட்டைகள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து போலீசார் காரை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்து வருகின்றனர்.தப்பி ஓடிய கார் டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.போலியான பதிவு எண் உள்ள காரில் போதை பொருள் கடத்திய சம்பவம் துறையூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்