காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம் தாலுகா,காரை கிராமத்தில் செயல்பட்டு வரும் அட்டை கம்பெனியில் ஆண்டி சிறுவள்ளூர் பகுதியைச் சார்ந்த எப்சி மேரி வயது 41 என்ற பெண்மணி கடந்த மூன்று நாட்களாக கூலி வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மாலை பணி முடிந்து வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடிச்சென்ற நிலையில் அட்டை கம்பெனியின் உள்ளே எப்சி மேரி தலையில் பலத்த காயம் அடைந்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்து உள்ளார்.
இது குறித்து உடனடியாக பொன்னேரி கரை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் எப்சி மேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு ஆதாரங்களை சேகரித்து எப்சி மேரியை கொலை செய்தவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அறிந்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு தடயங்களை சேகரித்து கொலையாளியை விரைந்து பிடிக்க உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
கொலை செய்யப்பட்ட எப்சி மேரிக்கு சுரேஷ் குமார் என்ற கணவரும் ஒரு மகனும் மகளும் உள்ளனர் அட்டை கம்பெனியில் கூலி வேலைக்குச் சென்ற பின் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் காரை சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.