செய்தியாளர் பார்த்தசாரதி

புதுவை வில்லியனூர் ஶ்ரீ பெருந்தேவித் தாயார் ஸமேத தென்கலை ஶ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் காலை திருத்தேர் விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது 2.7.2025 கொடியத்துடன் தொடங்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் எம்பெருமான் ஒவ்வொரு நாளும் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார் இதனைத் தொடர்ந்து இன்று காலை திருத்தேர் வீதி உலா நடைபெற்றது
இதில் உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் . நமச்சிவாயம். சபாநாயகர் செல்வம் எதிர்க்கட்சித் தலைவர். சிவா. எம்.எல்.ஏ அனைவரும் கலந்து கொண்டு தேரின் வடத்தை பிடித்து துவக்கி வைத்தனர் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து திரு தேரை இழுத்துக் கொண்டே கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று சொல்லிக்கொண்டே சென்றனர் பக்தர்கள் அவர்களது வேண்டுதலை நிறைவேற்றினர் இதனைத் தொடர்ந்து ஆங்காங்கே அன்னதானமும் நீர்மோர் வழங்கப்பட்டது