தஞ்சாவூர்
தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு, தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் தடுப்பூசி பணியில் எம் எல் எச்பி உட்படுத்தும் இயக்குநர் உத்திரவை திரும்ப பெறவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சங்க நிறுவனர் ஆர்.இந்திரா தலைமையில், மாவட்ட தலைவர் அமலி, மாவட்ட செயலாளர் சீதாலெட்சுமி ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பா
ட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் வி. திருமாமகள் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்

தடுப்பூசி பணியில் MLHP I உட்படுத்தும் இயக்குநர் உத்திரவை திரும்ப பெறவேண்டு
மெனவும், 4,000-க்கும் மேற்பட்ட VHN/ANM காலிப் பணியிடங் களை VHN/ANM பயிற்சி பெற்றவர்களைக்கொண்டு மட்டுமே நிரப்பப்பட வேண்டுமெனவும், மகப்பேறு மற்றும் சிசு மரணங்கள் உயர்வதை தடுக்க சுகாதார செவிலியர்களின் நேரத்தையும், உழைப்பையும் முழுமையாக எடுத்துக் கொள்ளும் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தை சமூக நலத்துறைக்கு மாற்றிக் கொடுக்க வேண்டுமெனவும், கிராம சுகாதார செவிலியர்களின் பயிற்சிக்கு எதிராக, மக்கள் சேவைக்கு மாறாக, கணினி பணியில் மூழ்கடிப்பதை தவிர்த்து அப்பணிக்கு வேறு நபர்களை நியமிக்க வேண்டுமென வும் கிராம சுகாதார செவிலியர் களின் ஊதியத்திலிருந்து வாடகை பிடித்தம் செய்யும் துணை சுகாதார நிலையத்தில், MLHP நியமனம் செய்து இடைஞ்சல் இடையூறு ஏற்படுத்துவதை ரத்து செய்து அவர்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமெனவும், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மஞ்சள் காமாலை தடுப்பூசி மருந்து (Hepatitis B Vaccine) தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது தடுப்பூசி மருந்துகளின் தேவைகள் அதிகரித்துள்ளது.

எனவே பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தடுப்பூசி மருந்துகளை தயாரிக்க மத்திய, மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டும். சங்க கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து அனைத்து தடுப்பூசி மருந்துகளையும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யவும், செங்கல்பட்டு தடுப்பூசி பூங்காவில் தடுப்பூசி உற்பத்தியை துவங்கிட ஒன்றிய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் உடனே தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறும் தவறும் பட்சத்தில் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடத்துவதென ஆர்ப்பாட்டத்தில் முடிவெடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *