ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தில் 64 குக்கிராமங்கள் உள்ளது. ஒன்றரை லட்சம் மக்கள் இந்த பஞ்சாயத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

வாக்காளர்கள் 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் பேர் உள்ளனர். ஆனால் இந்த பஞ்சாயத்தில் அடிப்படை வசதி என்பது கேள்விக்குறிதான். குடிநீர் என்பது ஒரு கேள்விக்குறி தான்.

40 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. ஆனால் 24 லட்சம் தண்ணீர் இருந்தால் போதுமானது. ஆனால் தண்ணீர் வருவது 10 முதல் 12 லட்சம் லிட்டர் தண்ணீர் தான்.

இவற்றிலும் பாதிக்கும் மேற்பட்ட தண்ணீர் வீணாகிறது. மேல்நிலைத் தொட்டிகளில் தண்ணீர் நிரம்பிய பின்பு தண்ணீர் கீழே சிந்தி பல லிட்டர் தண்ணீர் வீணாகிறது.

இது தொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஏ.இ.மகேஸ்வரி இடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பது கிடையாது‌.

மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்கு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி மகேஸ்வரி வருவதே கிடையாது. அதுபோல 60 குக்கிராமங்களில் தெரு விளக்கு எரியவே இல்லை. குப்பைகள் என்பது தெருவுக்கு தெரு மலை போல் குவிந்து வருகிறது.

இந்த பஞ்சாயத்தில் குடிநீர் தொட்டிகள் 30 உள்ளது. தாளமுத்து நகர், சமீர் வியாஸ் நகர், நேரு காலனி, காமராஜ் நகர், ஜே ஜே நகர் உள்ளிட்ட 30 குக்கிராமங்களில் 40 நாட்களுக்கு மேலாக குடிதண்ணீர் வராத சூழ்நிலையும் உள்ளது.

மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் சேகரிப்பிற்காக அலுவலகங்களில் வாங்கப்பட்ட பேட்டரி வண்டிகள் சரியான முறையில் பராமரிப்பு இல்லாமல் குப்பையில் போடப்பட்ட மாதிரி 20-கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் பழுதடைந்து பழைய இரும்பு கடைக்கு செல்லும் சூழ்நிலையில் உள்ளது.

அதுபோல மினி பேருந்து வசதி மாப்பிள்ளையூரணி, டேவிஸ் புறம் ஆகிய பகுதிகளுக்கு மினி பேருந்து வசதி இன்று வரை இயங்காத சூழ்நிலை உள்ளது.
அதுபோல கடற்கரைப் பகுதிகளில் காவல்துறை ரோந்து என்பது கிடையாது. இதனால் சட்ட விரோத செயல்கள் அங்கு நடைபெற்று வருகிறது.

மேலும் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தில் குடியிருக்கும் 6000 நபர்களுக்கு பட்டா வழங்க வேண்டிய சூழ்நிலையில், தற்போது 3000 நபர்களுக்கு மட்டும் தான் கணக்கு எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலின் போது கனிமொழி கொடுத்த வாக்குறுதியும் காற்றில் பறக்கிறது. சட்டமன்றத் தேர்தலின் போது சண்முகையா கொடுத்த தேர்தல் வாக்குறுதியும் காற்றோடு காற்றில் கலந்துள்ளது.

ஆனால் ஒன்றரை லட்சம் மக்கள் வாழும் மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்தில் மக்கள் படும் அவதி, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும் என்பது 100 சதவகிதம் உறுதியாகவே தெரிகிறது.

மக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் மற்றும் சுகாதாரம் இந்த இரண்டுமே மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்தில் இல்லை என்பது மட்டும் உறுதியாகவே தெரிகிறது.

மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்து ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், தான் தோன்றித்தனமாக மக்களை சந்திப்பது கிடையாது. மக்கள் குறைகளை சொன்னால் எதிர்த்து பேசுவது என்று செயல்பட்டு வருகிறார்.

ஊராட்சி செயலாளர் ஜெயக்குமாரை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் புகார் அளித்தும், மாற்றுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து மக்கள் அடிப்படை வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் கோபத்தை எல்லாம் வரும் 2026 தேர்தலில் மக்கள் 100 சதவிகிதம் திமுகவிற்கு எதிராகவே காண்பிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *