திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் வடகவுஞ்சி ஊராட்சி,பட்டியக்காடு கிராமத்தில் கிராம வன உரிமைக்குழுக்கூட்டம் கிராம சபா தலைவர்.நடராஜ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வன உரிமைச் சட்டம் முதன்மைப் பயிற்சியாளர். சதாசிவம் வன உரிமைச்சட்டம் – 2006 , தனிநபர் வன உரிமைகள். சமூக வன வள உரிமைகள், 13.06.2025 நடைபெற்ற வன உரிமை கிராமசபை, 07.07.2025 திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகியன பற்றி விளக்கப்பட்டது.
இதில் செம்பிரான்குளம் வன உரிமைக் குழு செயலாளர்.திவ்யா, கருவேலம்பட்டி வன உரிமை குழு செயலாளர்.மாரிமுத்து, கோரன் கொம்பு வன உரிமைக்குழு உறுப்பினர்.மாலா, தீபம் பெண்கள் குழு தலைவர்.தனலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.