தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தொடர் மறியல் போராட்டம் நடத்தினர் பழைய ஓய்வூதிய திட்டம் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் அரசாணை 243 ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிக்கோரி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்றது.
இதில் தேனி மாவட்டத்தில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர் கோரிக்கைகளாவது இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுஊதிய குழுக்களில் இழைக்கப்பட்ட அநீதி கலையப்பட வேண்டும்
தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தவாறு தமிழ்நாடு அரசு 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும் தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நியமனம் செய்ய வேண்டும்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் பெற்று பல ஆண்டுகளாக நியமன ஒப்புதல் வழங்கப்படாமல் ஊதியமின்றி பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு உடனடியாக நியமன ஒப்புதல் வழங்கிட வேண்டும்
என்று 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் மு. ராம்குமார் மாவட்ட செயலாளர் ஆ. சரவணன், மாவட்ட செயலாளர் முத்துராஜவேல் முன்னிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்
இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர் ஆசிரியர்களை தேனி தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர். மேலும் நாளை காலை மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் மறியல் போராட்டம் நடைபெறும் என்று போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.