கந்தர்வக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செய்தித் தொடர்பாளர் ரகமதுல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு. தியாகராஜன் அவர்களின் ஐம்பதாவது பிறந்த நாள் விழா தாம்பரத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தலைமையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர் நலன் சார்ந்த உரிமைகளுக்காக தொடர்ந்து களப்பணியாற்றி வருகிறார்.
2004 முதல் தமிழகத்தில் சுயம்பாக ஆரம்பிக்கப்பட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும் அன்றாடம் பாடுபட்டு வரும் நம் இயக்கம் பல அறிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டியுள்ளது.

சங்க வரலாறு:

2004 மற்றும் 2005 ல் தமிழக அரசால் ஒப்பந்த அடிப்படையில், தொகுப்பூதியத்தில் இளநிலை இடைநிலை, இளநிலை பட்டதாரி, ஆசிரியர் இளநிலை முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக 3000, 4000, 4500 ஊதியங்களில் ஒப்பந்த முறை தொகுப்பூதியத்தில் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வகையில் மூன்று வகையான ஆசிரியர் பணியிடங்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினால் பின்னர் அனைவரும் காலமுறை ஊதியத்தில் அவர்களின் பணித்திறன் அடிப்படையில் நிரந்தர படுத்த படுவார்கள் என்ற நிலையில் மிகவும் குறைந்த ஊதியத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றிய 53 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றினார்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தொடர் முயற்சியால் எங்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் 2006 ல் ஆட்சிக்கு வந்ததும் தான் பதவி ஏற்ற அதே நாளில், இனி ஆசிரியர் நியமனங்களில் சிவப்பு புதிய முறை ரத்து செய்யப்படும் என்று ஆணையிட்டு தனது ஒற்றை கையெழுத்தின் மூலம் சுமார் 53 ஆயிரம் ஆசிரியர்கள் காலம் வரை ஊதியம் பெற ஆணை பிறப்பித்தார் அதோடு மட்டுமல்லாமல் 2006க்கு பிறகு பணியில் சேர்ந்தும் அனைத்து ஆசிரியர்களும் நேரடியாக காலமுறை ஊதியத்தின் கீழ் பணி நியமனம் பெரும் வகையில் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட இதற்காக அப்போதைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 2007 ஆண்டு நடத்தப்பட்ட நன்றி அறிவிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட டாக்டர் கலைஞர் அவர்கள் சங்கத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் என்று பெயர் சூட்டியதோடு இச்சங்கம் ஆசிரியர்களின், அரசு ஊழியர்களின், மாணவர்களின் தேவைகளை அறிந்து பல வெற்றிகள் பெற்று வரலாற்று சாதனை புரிய வேண்டும் என்று வாழ்த்தினார்.

அன்றிலிருந்து இன்று வரை தமிழகம் முழுவதும் பரவலாக பறந்து விரிந்து ஆசிரியர்களை ஒருங்கிணைத்து மாபெரும் இயக்கமாக ஆசிரியர்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் மக்களுக்காகவும் பணியாற்று வரும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் தன்னுடைய இருபதாவது ஆண்டில் மகத்தான பணிகளை மேற்கொண்டு வருகிறது.


ஆசிரியர்களுக்கு உற்ற பாதுகாவலனாகவும், அரசு ஊழியர்களுக்கு நல்ல நண்பராகவும் விளங்கி வரும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், கடந்த காலங்களில் ஜாக்டோ ஜியோ நடத்திய பல போராட்டங்களில் இணைந்து பல பணிகளை செய்து வருகிறது. இப்பணிகளை எங்கள் ஆற்றல் மிக்க மாநில தலைவர் கு. தியாகராஜன் அவர்களின் தலைமையிலான நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து வழி நடத்தி வருகிறார்கள். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என்ற பாகுபாடு இன்றி அனைத்து துறைகளிலும் உள்ள ஆசிரியர்களை உள்ளடக்கி ஒரு மாபெரும் சங்கமாக கடந்த 20 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆசிரியர்களுக்கான கோரிக்கைகள்,

மாணவர்களுக்கான கோரிக்கைகள், , அரசு ஊழியருக்கான கோரிக்கைகள் என்று எவர் ஒருவரையும் தனித்து விடாமல் அனைவருக்கும் உரித்தான கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்து அதை பெற்று தரும் ஓர் அமைப்பாக திகழ்வது அனைவரின் மத்தியிலும் மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுக்க தனது கிளைகளை பரப்பிய தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கடந்த 20 ஆண்டுகளில் எண்ணற்ற மாணவர் நலன் ஆசிரியர் நலன் சார்ந்த கோரிக்கை மாநாடுகளையும் வெற்றிகரமாக நடத்தி வந்திருக்கிறது.

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றி அமைப்பது, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்துதல் உள்ளிட்ட முதன்மையான கோரிக்கைகளை உள்ளடக்கி இன்னும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. இதோடு பங்களிப்பு ஓய்வூதியத்தில் பணியாற்றி இறந்துபோன இச் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பல லட்சக்கணக்கான ரூபாய்களை உயிரிழந்தவர்களின் குடும்ப பாதுகாப்பு நிதியாக மாண்புமிகு தமிழகத்தின் இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போதே அவரை வைத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிதி வழங்கும் மேடையிலேயே மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப் படுத்தவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். அப்பொழுது அதை பரிசீலித்து தேர்தல் அறிக்கையில் இந்த கோரிக்கை நிச்சயம் இடம்பெறும் என்று இடம் பெற வைத்தார் அன்று முதல் இன்று வரை மீண்டும் பழைய ஓய்வு திட்டத்தை கொண்டு வந்து தீர வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வோடு விவேகத்துடன் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் அவர்கள் செயல்பட்டு வருகிறார் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை எங்களின் தொடர் முயற்சியால் விரைவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு அதிகம் உள்ளது.

ஆசிரியர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து அல்லும் பகலும் அயராது உழைத்து வரும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவருக்கு 50வது பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் இயக்க உடன்பிறப்புகள் தோழமை சங்க நிர்வாகிகள், அரசு உயர் அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *