தேனியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் தொடர் மறியல் போராட்டம்…
தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தொடர் மறியல் போராட்டம் நடத்தினர். இந்நிகழ்வில் பழைய ஓய்வூதிய திட்டம் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் அரசாணை 243 ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிக்கோரி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் மு. ராம்குமார் மாவட்ட செயலாளர் ஆ. சரவணன், மாவட்ட செயலாளர் முத்துராஜவேல் முன்னிலையில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறையினர் கைது செய்து மதுரை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்திருந்து மாலை விடுவித்தனர்.
மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் தொடரும் என்று போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.