டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் ரௌத்திரா அகாடமியை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கம் உட்பட பல்வேறு பதக்கங்கள் குவித்து அசத்தல்
இந்திய இளைஞர் சிலம்பம் விளையாட்டு சங்கம் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி,டெல்லி தல்கதோரா உள் விளையாட்டு அரங்கில் கடந்த ஜூலை 21 மற்றும் 22 ந்தேதி நடைபெற்றது…
தேசிய அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான நடைபெற்ற இதில், கேரளா,கர்நாடாகா,தமிழ்நாடு,மத்திய பிரதேசம்,மகாராஷ்டிரா,அரியானா என இந்தியா முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
தென்னிந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட வீரர்,வீராங்கனைகளில் கோவை சூலூர் ரௌத்திரா அகாடமியில் பயிற்சி பெற்று வரும் மாணவ,மாணவிகள் பங்கு பெற்றனர்.. ..
வயது அடிப்படையில்,ஒற்றைக் கம்பு, இரட்டை கம்பு, தொடும் முறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், கோவை ரௌத்திரா அகாடமியை சேர்ந்த மாணவ,மாணவிகள் நான்கு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என ஐந்து பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்..
இந்நிலையில் வெற்றி பெற்று கோவை திரும்பிய மாணவிகள் தன்ஷிகா,ரித்விக் ஸ்ரீ,சாமா வைஷ்ணவி மற்றும் மாணவர்கள் ஆத்விக்,சுதீஷ் ஆகியோருக்கு ரௌத்திரா அகாடமி பயிற்சியாளர்கள் வினோத், வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில் , இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது..
இதில் பெற்றோர்கள்,பயிற்சியாளர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்..