செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் பசுமைத்தாயகம் நாள் மருத்துவர் ச.இராமதாஸ் 87-வது பிறந்தநாள் முன்னிட்டு அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் சிறப்பு பூஜைகள் செய்து அன்னதானம் வழங்கப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ச.இராமதாஸ் பிறந்தநாள் விழா தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ஆராதனைகள் செய்து பொதுமக்களுக்கு பாமக நிர்வாகிகள் அன்னதானம் வழங்கி வருகின்றனர்
அதன் ஒரு பகுதியாக அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் புகழ்பெற்ற ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் அதிகாலை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ஆராதனைகள் செய்தனர்.
அதன் பின்னர் சீதாபுரம் ஊராட்சியில் உள்ள சிறப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர்.
இந்நிகழ்வில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் தே.சாந்தமூர்த்தி தலைமை தாங்கினார். வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பாக்சர் சதீஷ் முன்னிலை வகித்தார்.
இதில் மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் ஆத்தூர் வா.கோபாலகண்ணன்
மாநில இளைஞரணி செயலாளர் மின்னல்மூர்த்தி அச்சிறுப்பாக்கம் நகர செயலாளர் வெங்கடேசபுரம் கெ.அர்ஜுனன் தொகுதி செயலாளர் க.பா.லட்சுமிஆனந்த்
வண்ணியர் சங்க மாவட்ட தலைவர் க.பா.விஜயராமன் தெற்கு ஒன்றிய செயலாளர்
தா.விஜயகுமார் வன்னியர் சங்க மாவட்ட துணை தலைவர் பாக்சர் சந்தோஷ்
வன்னியர் சங்க நகர செயலாளர் பாரதிதாசன் பேரூர் தலைவர் ராகவன்
உட்பட பாமக ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.