திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அங்காளம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் வருடந்தோறும் 108- பால்குட விழாவும், திருவிளக்கு பூஜையும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 8- ஆம் ஆண்டு விழாவாக காலை 9- மணிக்கு குடமுருட்டி ஆற்றிலிருந்து 108- பால்குட ஊர்வலம் பறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பகல் 12- மணிக்கு ஆலயத்தை வந்தடைந்து,

அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. பகல் 1- மணிக்கு அறுசுவை அன்னதானம் நடைபெற்றது. அன்னதான உபயதாரர் சென்னை எஸ். செல்வராஜ், எஸ். நமச்சிவாயம் குடும்பத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
மாலை 6- மணிக்கு மகளிர்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்று அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
திருவிளக்கு பூஜை செய்தவர்களுக்கு புடவை, ஜாக்கெட் பிட்களை பாண்டிச்சேரி (கேம்ப் மஸ்கட்) எஸ்.வெங்கடேசன்- ஜெயலெட்சுமி குடும்பத்தினர்கள் வழங்கினர்.
விழா ஏற்பாடுகளை ஆலய விழாக்குழுவினர் கள் வலங்கை எம்.எம். சண்முகவேல், அம்மாப்பேட்டை ஜி.கிருஷ்ணமூர்த்தி, அங்காளம்மன் கோவில் தெரு மேஸ்திரி எம். செல்வம், ஏ.வெங்கடேஷ், எம். செந்தில் மேஸ்திரி, வெள்ளாளர் தெரு க. அப்பு (எ) ரத்தீஷ்பாபு, கள்ளர் தெரு அ.ராஜசேகர், புதுத் தெரு எம். சிவா மற்றும் நிர்வாக குழுவினர், தெரு வாசிகள், குலத்தெய்வக்காரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.