வெளிநாடுகளில் இருந்து ஆர்வத்துடன் கலந்து கொண்ட பலர் இருபது வருடங்களுக்கு பிறகு பழைய நினைவுகளை பகிர்ந்து நெகிழ்ச்சி

கோவை சரவணம்பட்டி கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பாக ரீவைண்ட் 2025 (REWIND -2025) எனும் தலைப்பில் நடைபெற்ற இதில், கல்லூரியின் மாணவர் நலன் புல முதன்மையர் பூவலிங்கம் அனைவரையும் வரவேற்று பேசினார்..

தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் கே.ஜி.ஐ.எஸ்.எல். கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் முனைவர் அசோக் பக்தவத்சலம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்..

அப்போது பேசிய அவர், ஒவ்வொரு மாணவனும் அறிவோடு சமூக அக்கறை கொண்ட மனிதனாக தன்னை உருவாக்கிக் கொண்டு,தாங்கள் கற்ற கல்வியை நாட்டின் முன்னேற்றத்திற்கு சரியான முறையில் பயனளிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்..

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னாள் பயின்ற மாணவர்கள் சந்திப்பாக நடைபெற்ற இதில், தமிழகம் மட்டுமின்றி சென்னை,பெங்களூர் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மலேசியா,பிரிட்டன்,போன்ற வெளிநாடுகளில் இருந்தும் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டனர்..

முன்னதாக அனைவரும் இணைந்து தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களுடன் இணைந்து குரூப் போட்டோ எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து தாங்கள் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பயின்ற பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை கண்டு தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்..

தொடர்ந்து நிகழ்ச்சியில் , முன்னாள் மாணவர் சங்கத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்று கொண்டனர் விழாவின் ஒரு பகுதியாக பிரபல பின்னணிப் பாடகர்களான அரவிந்த் சீனிவாஸ் மற்றும் ரேஷ்மா ஷியாம் ஆகியோர் கலந்து கொண்ட இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது..

விழாவில் கல்லூரியின் செயலர் முனைவர் வனிதா, கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெ.இரத்தினமாலா, தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் குமார் ராஜேந்திரன்,முன்னாள் மாணவர் சங்க தலைவர் புவியரசன், பொருளாளர் முனைவர் சந்தோஷ் குமார்,ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்..

இந்நிகழ்வில் 3000 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு ஒருவரை ஒருவர் மகிழ்வுடன் சந்தித்து தாங்கள் கல்லூரியில் கல்வி கற்ற அனுபவத்தை சக நண்பர்களோடும், பேராசிரியர்களோடும் பகிர்ந்து கொண்டனர்.

தங்களுக்குப் பின்னால் பயிலும் மாணவர்களுக்கு தங்களால் இயன்றதை என்றும் செய்வோம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *