கே வி முகமது அரியலூர் செய்தியாளர்:
அரியலூரில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது
அரியலூர் பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் புரவலர்பூ விஸ்வநாதன் தலைமை தாங்கி போராட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்
அரியலூர் மாவட்ட தலைவர் சின்னப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார் மாநில செயற்குழு உறுப்பினர் பரமசிவம் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் அரியலூர் ஒன்றிய தலைவர் கங்காதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளவரசன் மாவட்ட துணைத்தலைவர் கருப்பையா அங்கமுத்து வனிதாமணி சங்கீதா பாக்கியவதி சிவலிங்கம் கண்ணன் அறிவழகன் சாத்தமங்கலம் பாலு உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
செந்துறை தெற்கு ஒன்றிய தலைவர் பொன் குடி காடு கண்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார் ஜெயங்கொண்டம் தாலுக்கா சோழகங்கம் என்ற பொன்னேரியை நவீனப்படுத்தவும் பாசன மதகுகளையும் புனரமைக்கவும் சுற்றுலாத்தலமாக மேம்படுத்தவும் ரூபாய் 19.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டும் ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது
வேளாண்மை துறை தோட்டக்கலைத்துறை பொறியியல் துறை ஆகியவைகளில் உள்ள விவசாயிகளுக்கான மானிய திட்டங்கள் உடனடியாக விவசாயிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் அரியலூரில் நடந்தது