முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் பொள்ளாச்சி நகரில் துவக்கி வைத்தார் எம்.பி.
பொள்ளாச்சி
வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை பொள்ளாச்சி நகரில் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி துவக்கி வைத்தார்.
வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று
ரேஷன் பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் துவக்கி வைத்தார்.
அதேபோல் பொள்ளாச்சி நகரிலும் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
மகாத்மா காந்தி மண்டபம் வீதியில் பொள்ளாச்சி நகர தெற்கு பொறுப்பாளர் அமுதபாரதி தலைமையிலும், எல்.ஐ.ஜி. காலனியில் நகர வடக்கு பொறுப்பாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, வீடுகளுக்கே நேரில் சென்று பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் குடிமை பொருள் வழங்கல் துறை தாசில்தார் சசிரேகா தி.மு.க. நகர துணைச் செயலாளர் தர்மராஜ் நகராட்சி துணைத் தலைவர் கௌதம் நகராட்சி கவுன்சிலர்கள் நாச்சிமுத்து, தங்கவேல், செந்தில்குமார், சாந்தலிங்கம், பாத்திமா, சண்முக பிரியா, சுதா, வைஷ்ணவி, கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.