திருவாரூர் செய்தியாளர்
வேலா செந்தில்,
திருவாரூரில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு காவல்துறை சார்பில் இப்போது மக்கள் மத்தியில் ஊர்வலம் நடத்துவதற்கான ஆயத்த கூட்டத்தில் கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சிலைகள் வைக்க அனுமதிக்கப்படும் என காவல்துறை துணை கண்காணிப்பாளர் பேச்சு.விநாயகர் சிலை ஊர்வலம் பொதுமக்கள் பார்க்கும் நேரத்திற்குள் ஊர்வலம் நடத்தப்படும் என அமைப்பினர் பேச்சு.
திருவாரூர் பனகல் சாலையில் உள்ள தனியார் அரங்கில் காவல்துறை சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி மற்றும் இந்து மகாசபை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் குறித்து துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் பேசியபோது விநாயகர் சிலை கடந்த ஆண்டு வைக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே காவல்துறை அனுமதி அளிக்கப்படும் மண் சிலைகள் மட்டுமே ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது எனவே ஊர்வலம் குறித்த நேரத்தில் தொடங்க வேண்டும் என தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக இந்து முன்னணி நகர செயலாளர் விக்னேஷ் பேசியபோது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தனிநபர்களால் நடத்தப்படவில்லை கிராமங்கள் தோறும் உண்டியல் மூலம் பொதுமக்களிடம் சிறிய தொகையாக சேகரிக்கப்பட்டு ஊர்வலம் நடத்தப்பட்ட வருகிறது. எனவே மாலை நேரத்தில் ஊர்வலத்தை தொடங்கி பொதுமக்கள் ஒரே நேரத்தில் அனைத்து விநாயகர் சிலைகளை பார்த்து தரிசிக்க விரும்புகின்றனர் எனவே இரவு நேரங்களில் ஊர்வலம் நடத்த படாது எனவும் குறித்த நேரத்தில் ஊர்வலம் தொடங்கப்படும் அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகர காவல் ஆய்வாளர் சந்தானமேரி தாலுகா காவல் ஆய்வாளர் ஜெயந்தி மற்றும் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.