சசிகலா பிறந்தநாள் விழா-பண்பொழி திருமலை கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு
தென்காசி மாவட்டத்தில் சசிகலா பிறந்த தின விழாவை முன்னிட்டு பண்பொழி திருமலை கோவிலில் வழக்கறிஞர் எம்.பூசத்துரை பாண்டியன் தலைமையில் தங்கத் தேர் இழுத்து வழிபாடு செய்யப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பிறந்த தினமான ஆகஸ்ட் 18 அன்று அவரது பிறந்த நாள் விழாவினை தென்காசி மாவட்டத்தில்
வழக்கறிஞர் எம்..பூசத்துரை பாண்டியன் தலைமையில் சிறப்பாக கொண்டாடப் பட்டது .
அதன்படி தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலை குமாரசாமி கோவிலில் வழக்கறிஞர் எம்.பூசத்துரை பாண்டியன் தலைமையில் தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது
அதனைத் தொடர்ந்து திருமலை கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் சசிகலா பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.மேலும் இஸ்லாமியர்களின் மசூதிகள் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மேலும் நேற்று முன்தினம் காலை 09 மணி அளவில் கீழப்பாவூர் ஒன்றிய கழகத்தின் எம்.ஜெகன் சார்பில் வெள்ளகால் பகுதியில் ஏழை எளியவர்ளுக்கு புதிய ஆடைகளும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளும் வடக்குவாச் செல்வியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கீழப்பாவூர் ஒன்றியத்தில் குலசேகரபட்டி பகுதியில் உள்ள ஜும்.ஆ.பள்ளிவாசலில் சிறப்புதொழுகை நடைபெற்றது. தென்காசி ஒன்றிய கழகத்தின் சார்பில் திருச்சிற்றம்பலம் துவக்கப்பள்ளியில் தங்கபாண்டியன் சார்பில் பள்ளி மாணவ மாணவியர்க்கு புதிய சீருடைகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருச்சிற்றம்பலம் அம்பேத்கார் காலனியிலுள்ள பெந்தேகோஸ்தே சபையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
மேலும் செங்கோட்டை ஒன்றிய கழகத்தின் சார்பில் இலத்துார் ஊராட்சி. திருவெற்றியூர் அம்பேத்கர் காலணியில் செல்லச்சாமி சார்பில் அருள்மிகு ஈஸ்வரி அம்மன் திருக்கோவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் வடகரை அன்பு இல்லத்தில் உள்ள நபர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வாசுதேவநல்லூர் ஒன்றிய கழகத்தின் சார்பில் ரமேஷ் சார்பில் கழக தலைவர் எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. மேலும் சங்கரன்கோவில் நகர கழகத்தின் சார்பில் சங்கர நயினார் கோமதி அம்பாள் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சங்கரன்கோவில் ஒன்றிய கழகத்தின் சார்பில் களப்பாகுளம் பகுதியில் வள்ளி நாயகம் தலைமையில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது..
குருவிகுளம் ஒன்றிய கழகத்தின் சார்பில் ஒத்தகடை ஊராட்சியில் சுரேஷ் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து மாலையில் தென்காசி ஒன்றியம் பண்பொழி பேரூர் கழகம் சார்பில் சுப்பையாகண்னு தலைமையில் மாணவர்களுக்கு, ஏழை எளிய முதியோர்களுக்கு இனிப்புகள்,
மற்றும் புத்தாடைகளும் வழங்கப்பட்டது.
மேலநீலிதநல்லுார் ஒன்றிய கழகத்தின் சார்பில் வழக்கறிஞர் மானுார் ஒன்றிய கவுன்சிலர் முத்துபாண்டியன் தலைமையில் வன்னிக்கோனேந்தல் பகுதியில் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
அதன்பின் தேவர்குளம் ஊராட்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைதலைவர் தர்மராஜ் (எ) கண்ணன் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் நிர்வாகிகள் சுப்பையா கண்ணு, தர்மராஜ் என்ற கண்ணன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் செல்லச்சாமி, காளிராஜ், ராமச்சந்திரன், வள்ளிநாயகம், வாசுதேவநல்லூர் ரமேஷ், திருமலாபுரம் நவநீத கிருஷ்ணன், திருப்பதி, ஜெகன், கண்ணன், ஆறுமுகச்சாமி திருமலைக் குமார், சுப்பிரமணியன், ராமச்சந்திரன், பழனிவேல், ஐயப்பன், மற்றும் தொண்டர்கள், பெருந்திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எம்.பூசத்துரை பாண்டியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.