துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் ஜான் ஹோட்டலில் “தமிழ்நாடு பெஸ்ட் ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கூட்டமைப்பு”-ன் முப்பெரும் விழா (மாவட்ட அமைப்பு துவக்க விழா,பணி ஓய்வு பாராட்டு விழா, நிர்வாகிகள் தேர்வு) திருச்சி மாவட்டத் தலைவர் பெருமாள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் டி.சுரேஷ்,மாவட்ட பொருளாளர் கே.காமராஜ், துறையூர் வட்ட தலைவர் வி.நல்லுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் இல.ரவி, மாநில பொதுச் செயலாளர் செ.ராஜா, மாநில பொருளாளர் ஏ.வி.சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சங்க வளர்ச்சி, அருந்ததியர் சமுதாய மக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் பற்றியும் சிறப்புரையாற்றினர்.

விழா தொடக்கத்தின் நிகழ்வாக மாணவி E.L.கர்சனாமுகிலின் பரதநாட்டியம் மிக பிரமாதமாக நடைபெற்றது.இந்நிகழ்வில் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு நினைவு பரிசு வழங்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் சால்வை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது.

இதில் மாவட்ட செயலாளர் டி.சுரேஷ், மாவட்ட பொருளாளர் கே .காமராஜ்,துறையூர் வட்ட தலைவர் வி.நல்லுசாமி, துறையூர் வட்ட செயலாளர் செல்வராஜ்,வட்ட பொருளாளர் ராமலிங்கம், உப்பிலியாபுரம் வட்ட தலைவர் மோகன்ராஜ், உப்பிலிபுரம் வட்ட செயலாளர் தர்மபிரபு, வட்ட பொருளாளர் சேகர் மற்றும் அருந்ததியர் இன சொந்தங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *