அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் உள்ளம் தேடி இல்லம் நாடி சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நகரில் சில இடங்களில் நடந்து வந்தார் பின்பு அரியலூர் பஸ் நிலையம் அருகே நடந்த பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திற்கு அரியலூர் மாவட்ட தேமுதிக செயலாளர் ராமஜெயவேல் தலைமை தாங்கினார்
முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு மாவட்ட செயலாளர் ராமஜெயவேல் சால்வை அணிவித்து வரவேற்றார் அப்போது பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது அரியலூர் நகரில் அனைத்து சேதமடைந்த சாலைகளையும் சீரமைக்க வேண்டும் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட வேண்டும் இல்லையெனில் தேமுதிக வலுவான கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்று அதன் பிறகு ஒருங்கிணைந்த நீதிமன்றம் உட்பட அனைத்து பணிகளையும் அரியலூரில் மேற்கொள்வோம்
அரியலூரில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் இங்குள்ள சிமெண்ட் ஆலைகளில் படித்த உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்படும் எனவே தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்
தொடர்ந்து அவர் கீழப்பழுவூர் ஏலாக்குறிச்சி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார் கட்சியின் பொருளாளர் சுதீஷ் மாவட்ட செயலாளர்கள் அரியலூர் ராமஜெயவேல் பெரம்பலூர் ஐயப்பன் அரியலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்