மேட்டுப்பாளையம் கிழக்கு நகர் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 65 இடங்களில் விநாயகர் சிலை நிறுவப்பட்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
இதை அடுத்து பங்களா மேடு, இரட்டை பைப் திடலில் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட விநாயகர் சிலைக்கு இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் வழிபாடு நடைபெற்றது .
நிகழ்ச்சியில் நகரத் தலைவர் காளியப்பன் பொதுச் செயலாளர் கார்த்தி மற்றும் நகர நிர்வாகிகள் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.