சாலை விரிவாக்கம் 176 மரங்கள் வெட்டப்பட உள்ளது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் தேவாங்கர் கலைக் கல்லூரியில் இருந்து இராமலிங்கா மில் வரையிலான சாலையில் இருபுறங்களில் இருக்கும் அழகிய மரங்கள் அனைத்தும் வெட்டப்பட உள்ளது…

இதைப் போலவே விருதுநகர் ரோட்டில் சந்திரா நேசனல் பள்ளியில் இருந்து அருப்புக்கோட்டை எல்லை வரை இருக்கும் மரங்களும் வெட்டப்பட உள்ளது…
இந்த 2 சாலைகளும் மொத்தமாக 6கிமீ தூரத்திற்கு சாலைகள் நான்குவழியாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளதே மரங்கள் வெட்டப்படுவதற்கான காரணமாகும்…
மொத்தமாக புளியமரம், வேங்கை, வாகை என 176 மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் கணக்கெடுத்துள்ளனர்வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக 10 மரங்கள் புதியதாக நட்டு வைக்க வேண்டும் என்ற பசுமை ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி வனத்துறையும் மரங்களின் அளவினை கணக்கெடுத்துள்ளது…

அடுத்தக்கட்டமாக வனத்துறை பசுமை ஆணையத்திற்கு அறிக்கை வழங்கும்… அதன் பின் பசுமை ஆணையம் ஒப்புதல் வழங்கும்… ஒப்புதல் வழங்கிய உடனே நெடுஞ்சாலைத்துறை மரங்களை வெட்டும்…

இரண்டு பக்கமும் சாலையை அகலப்படுத்தி நடுவில் செண்டர் மீடியனோடு சாலை வர உள்ளது…நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த மொத்தமாக 44 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பணிகள் விரைவில் துவங்கும் அருப்புக்கோட்டையிலிருந்து சாயல்குடி வரை சாலை அகலப்படுத்தப்பட உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *