சின்னமனூர் அருகே மேகமலை பகுதியில் வளரினம் பருவத்தில் நிகழும் கர்ப்பங்கள் குறித்த தெரு நாடகங்கள் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலை மணலார் பகுதிகளில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் தமிழகத்தில் வளரினம் பருவத்தில் அதிகமாக கர்ப்பங்கள் நிகழும் 24 தாலுகாக்களில் தெருநாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படும் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் என் ராமகிருஷ்ணன் ஆண்டிபட்டி ஆ. மகாராஜன் பெரியகுளம் கே எஸ் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தனர்.இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கிறிஸ்டோபர் தாஸ் பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.