மாப்பிள்ளையூரணி பூப்பாண்டியாபுரத்தில் நியாயவிலை கடையை சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்.

தூத்துக்குடி
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பூப்பாண்டியாபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.12.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடையை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகையா திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை விநியோகித்து லட்டு வழங்கினார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹைகோர்ட் மகாராஜா, பானு, கூட்டுறவு சார்பதிவாளர் அந்தோணி பட்டுராஜ், கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன், ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு வங்கி செயலாளர் பாலமுருகன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ் பாலன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் பால்துரை, ஸ்டாலின், மாணவரணி துணை அமைப்பாளர் தங்கமாரி முத்து, வர்த்தக அணி துணை அமைப்பாளர் பிலோமின்ராஜ், ஒன்றிய துணைச்செயலாளர் கணேசன்,தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் சின்னதுரை, சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், கிளை செயலாளர்கள் கதிர்வேல் பூசாரி முருகன், துரை, இம்மானுவேல், பாரதிராஜா, ராயப்பன், அன்புரோஸ், முருகன், கோட்டைக்குமார், ராமர் பாண்டியன், கப்பிகுளம் பாபு, மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *