கோவை மாவட்டம் வால்பாறையில் இந்து முன்னணி பேரியக்கத்தின் நிறுவனத் தலைவர் ராமகோபாலனின் 98 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஏ.எஸ்.டி. சேகர் தலைமையில் வால்பாறையிலுள்ள காந்தி சிலை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்து முன்னணியின் நிறுவனத்தலைவர் ராமகோபாலனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கி ஸ்டேட் இந்துமுன்னணி அறக்கட்டளை சார்பாக உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்கள் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
வெகு சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி நகர, ஒன்றிய, முடிஸ் ஒன்றிய பொறுப்பாளர்களும், இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர்களும், பரிவார அமைப்பு பொறுப்பாளர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்