புதுச்சேரி தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் ஆலோசனை.
இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதம் எண் 23/2025-ERS (Vol.II) dt. 24/6/2025 மூலம் பீகார் மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை நடத்தியுள்ளது மேலும் இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நாடு முழுவதும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகுறித்த முன்னேற்பாடுகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் புதுச்சேரி
தலைமைத் தேர்தல் அதிகாரி ஜவகர் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்,
அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார் மேலும் இந்திய தேர்தல் ஆணையம் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான அட்டவணையை புதுச்சேரிக்கு வெளியிட்ட பின் மேலும் ஒரு கூட்டம் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் நடத்தப்படும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் துணைத் தலைமை தேர்தல் அதிகாரிகள் தில்லைவேல் மற்றும் ஆதர்ஷ் கலந்து கொண்டனர்.