உங்களின் பாதுகாப்பு முக்கியம் உணர்ச்சி பொங்க பேசிய மேயர் ஜெகன்.
சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் தூய்மை பணியில் ஈடுபட மாநகராட்சி மேயர் ஜெகன் ஆணையர் பிரியங்கா களத்தில் இறங்கினார்கள்.
முதலில் இனிகோ நகர் கடற்கரைப் பகுதியில் கல்லூரி மாணவ மாணவிகள் வீகென் டிரஸ்ட் மற்றும் பல்வேறு சமூக நிறுவனத்தின் சார்பில் இனிய நகர் கடற்கரை முழுவதும் சுத்தம் செய்யும் பணியை மாநகராட்சி மேயர் ஜெகன் துவக்கி வைத்தார் கடற்கரை பகுதியில் தேங்கி கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை மாணவிகளுடன் சேர்ந்து மாநகராட்சி மேயர் ஜெகன் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் கழிவுகளை அப்புறப்படுத்தினர்.
அதன் பின்பு மாநகராட்சி ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து அங்கு இருந்த முள் செடிகளை முழுவதும் அப்புறப்படுத்த மாநகராட்சி மேயர் ஜெகன் உத்தரவிட்டார் அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மாணவ மாணவிகளுக்கு காலை உணவுகளுக்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்யுமாறு மாநகராட்சி மேயர் ஜெகன் உத்தரவிட்டார் அதன்பின்பு ரோச் பூங்கா வழியாக கடற்கரை சாலைக்கு மேயர் ஜெகன் ஆணையர் பிரியங்கா வந்தனர் துறைமுக சாலையில் நடைபாதை நடைபாதை ஒட்டி உள்ள கடல் பகுதியில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவ மாணவிகளுடன் சேர்ந்து கழிவுகளை அப்புறப்படுத்தினார்.
மாநகராட்சி மேயர் ஜெகன் அப்போது கடல் பகுதிக்குள் இறங்கி அங்கு கடந்த மது பாட்டல்களை மாணவ மாணவிகள் அப்புறப்படுத்தி கொண்டிருந்தார்கள் அதனைப் பார்த்த மேயர் ஜெகன் உங்களின் பாதுகாப்பு தான் முக்கியம் நீங்கள் பாதுகாப்பாக நின்று கொண்டு கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் கல் கலை பிரட்ட வேண்டாம் அதனால் பாதிப்புகள் ஏற்பட்டு விடும் என்று மாணவர்கள் மத்தியில் உரிமையோடு உணர்ச்சிபூர்வமாக மாநகராட்சி மேயர் ஜெகன் பேசினார்.
சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று மேயர் ஜெகன் ஆணையர் பிரியங்கா ஆகியோர் நடைபாதை முழுவதும் குப்பைகளை அப்புறப்படுத்தும் பார்வையிட்டனர் அதன் பின்பு அந்த ரோட்டின் மேல் புறம் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபாதை அமைக்கப்பட உள்ளது ரோட்டில் இருந்து மூன்று அடி தள்ளி அமைக்கப்படுகின்ற நடைபாதையை மாநகராட்சி மேயர் ஜெகன் பார்வையிட்டார் ஆணையர் பிரியங்கா உடன் ஆலோசனை மேற்கொண்டார்.
எப்படி அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் அதில் இரவை பகலாக்கும் வகையில் மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளதாகவும் பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்படுத்தும் வகையில் நடைபாதை அமைக்கப்பட உள்ளது என்று மே. ஜெகன் கூறினார் அதன்பின்பு பனன விதைகளை மாநகராட்சி மேயர் ஜெகன் ஆணையர் பிரியங்கா பண விதைகளை விதைத்தனர்.
இரண்டு மணி நேரம் கடற்கரை சாலை முழுவதும் மாநகராட்சி மேயர் ஜெகன் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு தூய்மை பணிகளையும் துவக்கி வைத்து பணியில் ஈடுபட்டார் பீச் ரோட்டில் மேல்புறம் நடைபாதை அமைத்து மின்விளக்குகள் அமைப்பதை பொதுமக்கள் பெரிதும்மாநகராட்சி மேயர் ஜெகனை பாராட்டினார்கள். அதன் பின்பு படகு முகாமுக்கு தென்புறம் உள்ள சாலையை நேரில் சென்று பார்வையிட்டு அங்கு என்ன வசதிகள் மக்களுக்கு பயன்படும் வகையில் அமைக்கப்படலாம் என்பதையும் மேயர் ஜெகன் ஆய்வு மேற்கொண்டார் சில மாதத்தில் துறைமுக சாலையில் மேல்புறமும் நடைபாதை அமைக்கப்பட்டு மின்விளக்குகள் அமைக்கப்படுவதால் சில பல்வேறு சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாது.
என்று உறுதியாக தெரிய வருகிறது இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார் திமுக வட்டச் செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் ஆன ரவீந்திரன் மண்டல தலைவர் நிர்மல்ராஜ் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்