தமிழத்தின் சமையல் கலையை சர்வதேச அளவில் கொண்டு சேர்த்த தமிழகத்தை சேர்ந்த மெர்வின் ஜோசுவா
ஆஸ்திரேலியாவில் சிறந்த உணவகமாக “தி லாஜிக்கல் இந்தியன்”விருது பெற்று அசத்தல்
ஆஸ்திரேலியாவில்“தி லாஜிக்கல் இந்தியன் உணவகத்தை நடத்தி வரும் கோவையை சேர்ந்த மெர்வின் ஜோசுவாவிற்கு அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் லூசி ஹூட் விருது வழங்கி கவுரவித்துள்ளார்..
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய நாட்டில் தி லாஜிக்கல் இந்தியன் எனும் தென்னிந்திய வகை உணவகத்தை நடத்தி வருபவர்,தமிழ்நாட்டின் கோவையை சேர்ந்த மெர்வின் ஜோசுவா..தமிழக பாரம்பரிய உணவு வகைகளாக சர்வதேச அளவில் கூறப்படும் கோரமண்டல் உணவு வகைகளை அடிலெய்டில் வழங்கும் முதல் உணவகம் என்ற பெருமையை பெற்ற தி லாஜிக்கல் இந்தியன் 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த உணவகம் மற்றும் கேட்டரிங் விருதுகளில், தெற்கு ஆஸ்திரேலியாவின் சிறந்த இந்திய உணவகம் என்ற பட்டத்தை வென்றுள்ளது.
இதற்கான விருதை ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் லூசி ஹூட் மெர்வின் ஜோசுவாவிடம் ‘சிறந்த இந்திய உணவகம்’ என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளார்..
கடந்த ஆகஸ்ட் மாதம் அடிலெய்டு ஸ்கைசிட்டி பகுதியில் நடைபெற்ற இதற்கான விழாவில்,ஆஸ்திரேலியாவின் உணவுப் பிரியர்கள் ,300 க்கும் மேற்பட்ட சமையல் கரைஞர்கள் , உணவக உரிமையாளர்கள், கேட்டரிங் உரிமையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்..
இது குறித்து விருது பெற்ற மெர்வின் கூறுகையில்,இந்த விருதால் ,தமிழக பாரம்பரிய உணவு வகைகளுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கூறிய அவர்,இதனால் இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு கிடைத்த வெற்றியாக பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்..
தென்னிந்திய தமிழ் உணவு வகைகள் உலக அரங்கில் அங்கீகாரத்தைப் பெற்று வருவதுடன், நியூயார்க் முதல் மெல்போர்ன் வரையிலான நகரங்களில் உள்ள உணவகங்கள் இப்போது அதன் தனித்துவமான சுவைகளை எடுத்துக்காட்டி வருவது குறிப்பிடதக்கது..
சர்வதேச அளவில் தென்னிந்திய குறிப்பாக கொங்கு மண்டல உணவு வகைகளுக்கு விருது வாங்கி இந்திய அளவில் பெருமை சேர்த்துள்ள தமிழகத்தை சேர்ந்த ஜோசுவா மெர்வினை பலரும் பாராட்டி வருகின்றனர்…