கம்பம் மாநகரின் பிரபல திரையரங்கில் தீபாவளியை முன்னிட்டு தீபாவளி எக்ஸ்போ. வணிகர்களுக்கு குறைந்த வாடகையில் ஸ்டால்கள் தேனி மாவட்டம் கம்பம் மாநகரில் மக்களின் நன்மதிப்பை பெற்று சிறப்பாக இயங்கி வரும் RJMS the Danube சீனிகொயர் திரையரங்கு வளாகத்தில் தீபாவளியை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு மெகா தீபாவளி எக்ஸ்போ நடக்க இருப்பதால் சிறு மற்றும் பெரு வணிகம் செய்பவருக்கு ஓர் அரிய வாய்ப்பை வழங்கி உள்ளது.
அடுத்த மாதம் தீபாவளி திருநாளை முன்னிட்டு தீபாவளிக்கு முன் மூன்று நாட்கள் அக்டோபர் மாதம் 17 18 மற்றும் 19 ஆகிய மூன்று நாட்களுக்கு தியேட்டர் வளாகத்தில் 25 ஸ்டால்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஸ்டாலும் 10X10 சதுரடி வீதம் அமைக்கப்பட்டுள்ளது. வணிகர்கள் தொழில் வளத்தை பெருக்கி தங்களின் வருமானத்தை பெருக்கிடவும் மற்றும் வாடிக்கையாளர்களிடம் சென்றடையவும் இது ஓர் அரிய வாய்ப்பு இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள தியேட்டர் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வணிகர்கள் ஸ்டால் புக் செய்வதற்கு 93 811 88888 என்ற மொபைல் நம்பருக்கு அழைத்து புக் செய்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது இந்த ஸ்டால்களில் துணிக்கடை செப்பல் கடை பேன்சி ஸ்டோர் ஸ்னாக்ஸ் கடை ஃபாஸ்ட் ஃபுட் கேக் ஷாப் ஹோம் டெக்கர் ஷாப் ஐஸ்கிரீம் ஷாப் மற்றும் பல வணிக நிறுவனங்கள் ஸ்டாலாகவும் மற்றும் பல பொருட்களின் வணிக நிறுவனங்கள் ஸ்டால் அமைத்து பயன்பெறலாம்.
மேலும் இந்த மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒரு ஸ்டாலின் வாடகையானது ரூபாய் 2500 மட்டுமே இந்த குறைந்த வாடகையில் பயன்பெறுமாறும் தியேட்டர் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் திரையரங்கு வளாகத்தில் 25 ஸ்டால்கள் மட்டும் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று திரையரங்கு நிர்வாகம் அறிவித்துள்ளது.