பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் 38வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இதில்,கல்லூரி முதல்வர் செங்குட்டுவன் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் வின்சென்ட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் விழாவில் முனைவர் பட்டங்களும், 1040 முதுநிலைப் பட்டங்களும் வழங்கப்பட்டன. முதல் மதிப்பெண் பெற்ற 32 மாணவர்களுக்குப் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் சிறப்பு விருந்தினர் வழங்கினார்.
ஊட்டச்சத்துவியல் துறைத்தலைவர் உத்ரா நன்றியுரை வழங்கினார்.