மேட்டுப்பாளையம் அருகே அன்னூர் கே. கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தாரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
முன்னதாக ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் ஸ்ரீமலையப்ப சுவாமி யாக சாலையில் எழுந்தருளினார். அங்கு அங்குரார்ப்பணம், உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற்றது பின்னர் விஷ்வக்சேனருடன் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார்.
இதை அடுத்து கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது தொடர்ந்து பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் நான்கு மாட வீதியில் மலையப்பசாமி வலம் வந்தார். தொடரும் நாட்களில் சின்னசேஷ வாகனம்,அன்னபக்ஷி வாகனம், மறுநாள் சிம்ம வாகனம்,முத்து பந்தல் வாகன பெருமாள் எழுந்தருள உள்ளார்.
வரும் 28 ஆம் தேதி கருட சேவையும், அதனை தொடர்ந்து அக்.1 ஆம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வும் நடைபெற உள்ளது. கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டுச் சென்றனர்.