மாராடி, காமாட்சிபுரம், எ.பாதர்பேட்டை, ஊராட்சிகளுக்கு “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்
துறையூர் செப்-25
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் தனியார் திருமண மண்டபத்தில் எ.பாதர்பேட்டை, காமாட்சிபுரம்,மாராடி ஆகிய ஊராட்சிகளுக்கு (செப்-24)”உங்களுடன் ஸ்டாலின்”முகாம் நடைபெற்றது.இம்முகாமை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் துவக்கி வைத்தார்.
இதில் எ. பாதர்பேட்டை, காமாட்சிபுரம், மாராடி ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பட்டா, ரேசன் கார்டு, மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை, உள்ளிட்ட தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இம்முகாமில் 15 அரசு துறையினர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.இதில் வட்டாட்சியர் சிவகுமார்,வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிசாமி, உப்பிலியபுரம் திமுக ஒன்றிய செயலாளர்கள் அர.ந.அசோகன், முத்துசெல்வன்,பேரூர் செயலாளர் நடராஜன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், ராஜசேகர்,தலைமை இடத்து துணை வட்டாட்சியர் ஐயப்பன், வட்ட வழங்கல் அலுவலர் முத்து,மண்டல துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ்,ஆரம்ப சுகாதார அலுவலர் செந்தில்குமார்,ஊராட்சி செயலர்கள் அசோகன், மதன், சுரேஷ், ராமசந்திரன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர்கள் நடராஜன், விஜய், பழனியாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்