முதல்வர் வருகை ஆய்வு கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 29, 30 ஆகிய தேதிகளில் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்து பல்வேறு நலதிட்டங்கள் பயனாளிகளுக்கு வழங்க உள்ள நிலையில், அதுகுறித்து ஆய்வுக்கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தமிழக நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்டசெயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பளர் மற்றும் , அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.