திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் செட்டித்தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவில் ஒன்பதாம் நாள் நேற்று மாலை 6 மணிக்கு அம்மன் ஸ்ரீ சரஸ்வதி அலங்காரத்தில் காட்சி அளித்தார், இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு நடைபெற்றது,
இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. ஒன்பதாம் நாள் மண்டகப்படி உபயதாரர்கள் வளையமாபுரம் எஸ்.சிவராமன் உடையார், விருப்பாட்சிபுரம் கு.தினேஷ் குஞ்சையா உடையார், சாரநத்தம் ஜஜேகே பன்னீர்செல்வம் உடையார் குடும்பத்தினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
நவராத்திரி திருவிழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர்/ தக்கார் கோ.கிருஷ்ணகுமார், ஆய்வாளர் க.மும்மூர்த்தி, மண்டகப்படி உபயதாரர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
இதேபோன்று வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவில் நேற்று ஒன்பதாம் நாள் மாலை 6 மணிக்கு அனைத்து சன்னதிகளிலும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று அம்மன் ஸ்ரீ சரஸ்வதி அலங்காரத்தில் காட்சி அளித்தார்,
இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. நவராத்திரி திருவிழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார், பரம்பரை அறங்காவலர் வலங்கைமான் கே.நடராஜன்& சகோதரர்கள், ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் நற்பணி மன்ற அறக்கட்டளையினர் மற்றும் மண்டகப்படி உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.