ராமநாதபுரம் மாவட்டம், கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள்மேல் நிலைப் பள்ளியில் கடந்த ஒரு வாரமாக நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது.
இதில் முத்து நகர் பகுதியில் பிளாஸ்டிக் ஓழிப்பு, மஞ்சள் பை விழிப்புணர்வு மற்றும் பள்ளி மைதானம் தூய்மைப் படுத்து பணியினை மாணவிகள் மேற்கொண்டனர். மேலும் யோகாபயிற்சி மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் மஙகளநாதன் முன்னிலைவகித்து சிறப்புரையாற்றினார் பின்னர் முகாம் நிறைவு நாளில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் பள்ளியின் செயலர் சங்கர்
தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
மேலும் பள்ளியின் தலைவர் சண்முகராஜ் பாண்டியன் பொருளாளர் சரவணன், உறுப்பினர்கள் குழந்தைராஜன், ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக
விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் தலைமை ஆசிரியை சிந்துமதி வரவேற்று பேசினார் பள்ளி வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் அலுவலர்கள் சுகுணா தேவி, இராஜப்ரதா ஆகியோர் மாணவியர் உடனிருந்து பணிகளை கவனித்துக் கொண்டனர்.