தூத்துக்குடி சந்தை ரோடு அண்ணாநகா் பகுதியில் நடைபெறும் வடிகால் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவு படி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் நடைபெற்று வரும் கால்வாய் சாலை அமைக்கும் பணி உள்ளிட்டவைகளை சூழற்சி முறையில் பாா்வையிட்டு பணிகளை நல்லமுறையில் செய்திட வேண்டும் என்று ஓப்பந்ததாரா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி ரயில்வே ஸ்டேஷன் முன்புள்ள சாலையில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளையும் சண்முகபுரம் சந்தைரோட்டில் நடைபெற்று வரும் அண்ணாநகா் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளையும் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டாா்.
சுகாதார பணிக்குழு தலைவர் சுரேஷ்குமாா், பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலா் கனகராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பா், உள்பட பலா் உடனிருந்தனா்.